Friday, August 1, 2008

பச்சை சாதம்

தமயந்தியும் தனலஷ்மியும் நெடுநேர நண்பிகள். (நெடு நாளைய நண்பிகள் தெரியும், அது என்ன நெடு நேர நண்பிகள்? ஒண்ணுமில்லை போன வாரம் பட்டு புடவை கடைல பேசி பழகி ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. புடவை கடைல எந்த பொண்ணுதான் சீக்கிரம் புடவை எடுத்துருக்காங்க. அதுவும் பட்டு புடவை!). அன்று சந்தையில் (சுத்த தமிழில் மார்க்கெட்டுனு சொல்லுவாங்க) இருவரும் சந்தித்து(சு.த மீட் பண்ணறது) கொண்டார்கள்.

தமயந்தி "என்ன தனம்? நல்லா இருக்கியா?"

தனம் "ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்கே?"

தமயந்தி "இருக்கேன்.ஆனா இல்லை"

தனம் "விளங்கர மாதிரி சொல்லுடி. இப்படியே பேசினா நீயும் விளங்காம போயிடுவே"

தமயந்தி "நான் நல்லா இருக்கேன். அவர் நல்லா இல்லை"

தனம் "வீட்டுல உன் சமையலோ?"

தமயந்தி "ஆமான்டி. சும்மா ட்ரை பண்ணேன்.ஆனா என் சமையலால ஒண்ணும் அவருக்கு உடம்பு முடியாம போகலை. அவருக்கு கலர் அலர்ஜி இருக்கு.அவரு எந்த கலரா பாத்தாலும் பயப்படுறாரு. சாப்பிட்டா vomit எடுக்குறாரு"

தனம் "அச்சச்சோ! இப்படியெல்லாம் ஒரு மனுஷனுக்கு வியாதி வரனும்"

தமயந்தி "பச்சை சாதம் சாப்பிட்டதிலிருந்து படுத்த படுக்கையா
ஆயிட்டாரு"

தனம் "பச்சை சாதமா அப்படினா?"

தமயந்தி "உனக்கு முதல இருந்து சொன்னாத்தான் புரியும்.ஒரு நாள் வீட்டுல தயிர் சாதம்தான் இருந்துச்சு. தயிர் வெள்ளையா இருந்துச்சு. பாக்க கலரா இருக்கட்டுமேனு மஞ்ச பொடி போட்டு கொண்டு போய் கொடுத்தேன். சாப்டுட்டு வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாரு"

தனம் "சாதரணமா சாம்பார்லையும் மஞ்ச பொடி தானே போடுவோம். அது ஒன்னும் பண்ணக்கூடாதே"

தமயந்தி "அது மட்டும் போடலை.சாம்பார்ல போடுற மஞ்ச பொடி தீந்துருச்சு.அதனால முகத்துக்கு போடுற பூசுமஞ்ச தூள் போட்டேன். ரெண்டும் மஞ்சள் தானே."

தனம் "சரியாத்தேனே பண்ணிருக்கே"

தமயந்தி "சரி அவருக்கு தயிர் சாதம் ஒத்துக்கலையோனு அடுத்த நாள் தக்காளி சாதம் வச்சேன். அப்பதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அவருக்கு சிகப்பு கலர் பிடிக்காதுன்னு."

தனம் "எந்த கலர் பிடிச்சா என்ன பிடிக்காட்டா என்ன? நீ சமைக்கிற்தே பெரிய விசயம்.இதுல பிடிச்ச கலருல வேற பண்ணனுமா?

தமயந்தி "என்ன இருந்தாலும் இத்தனை நாள் நமக்கு சமைச்சு போட்டவரு. அவருக்கு பிடிச்ச கலருல பண்ணாதேனே நல்லா இருக்கும்."

தனம் "அப்ப வேற சாதம் பண்ணீயா?"

தமயந்தி "அதெப்படி செஞ்ச சாதத்தை வேஸ்ட் பண்ணலாமா? அவருக்கு ஆரஞ்சு கலர்னா ரொம்ப பிடிக்கும். அதனால தக்காளி சாதத்தை ஆரஞ்சு கலரா மாத்திட்டேன்."

தனம் "சூப்பர். எப்படி?"

தமயந்தி "கேசரி பவுடர் கலந்துட்டேன்"

தனம் "ஓ கேசரி பவுடர் போட்டதும் ஆரஞ்சு கலருல மாறிடுச்சா?"

தமயந்தி "எங்கே? இருந்த கேசரி பவுடர் எல்லாம் போட்டும் ஆரஞ்சு கலரா மாறலை. அதனால ரெண்டு ஆரஞ்சு பழம் வெட்டி ஜூஸ் ஆக்கி போட்டேன். "

தனம் "நீ ஃபான்டா ட்ரை பண்ணிருக்கலாம்"

தமயந்தி "அதுதான்டி கடைசியல கை கொடுத்துச்சு.ஃபான்டா ஊத்தனுதுக்கு அப்பறம்தான் நான் நினைச்ச கலரே வந்துச்சு. இவ்வளவு சூப்பரா சமைச்சு கொண்டு போய் கொடுத்த சாப்டுட்டு மறுபடியும் வாந்தி."

தனம் "அடடா உன் சமையலுக்கு வந்த கொடுமையை பாரு"

தமயந்தி "அப்புறம் அவரு என்னம்மோ நான் விஷத்தை கொடுத்த மாதிரி ஒரு லுக் விட்டுட்டு இனிமேல் நீ சமைக்கவே வேண்டாம். பச்சையா கொடுத்தா போதும்.அப்படியே சாப்பிடிரேனு சொல்லிட்டார். "

தனம் "அப்ப உனக்கு சமையல இருந்து விடுதலை"

தமயந்தி "அப்படி விட்டுற முடியுமா? அவர் அப்படி சொன்னதுக்கு அப்புறந்தான் எனக்கு புரிஞ்சுச்சு. அவருக்கு பச்சை கலர்தான் புடிக்குமுன்னு"

தனம் "எப்படி இப்படி?"

தமயந்தி "சரின்னு மார்க்கெட் போய் பச்சையா ஏதாச்சும் வாங்கலாமுன்னு போனேன். அன்னைக்கு ஏதோ லாரி strike.அதனால பச்சை மிளகாய்தான் கிடைச்சுது. அதை வச்சுத்தான் பச்சை சாதம் பண்ணேன்.அப்புறந்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.அவருக்கு ஏதோ அலர்ஜி இருக்குன்னு. அதுவும் கலர் அலர்ஜினு."

தனம் "சூப்ப்ர்டி. உன் ரெசிபி எல்லாம் கொடு. நானும் என் புருஷனுக்கு சமைச்சு போட்டு அவருக்கு கலர் அலர்ஜி இருக்கானு டெஸ்ட் பண்ணனும்."

தமயந்தி வேகவேகமா எல்லா ரெசிபியும் எழுதி கொடுக்க தனம் சந்தோஷமாக வாங்கி கொண்டு கலர் அலர்ஜி டெஸ்ட் எடுக்க வீட்டுக்கு சென்றாள்.

--------------------------------------------------------------------------
சும்மா தோனுச்சு. எழுதிட்டேன். நல்லா இருந்தா கமென்ட் போட்டுட்டு போங்க. நல்லா இல்லைனா கலாய்ச்சுட்டு(விருப்பப்பட்டா திட்டவும் செய்யலாம்) போங்க.

7 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

My God! 10 Pocket GREEN RICE for u.

U must eat that green rice.

Apathan ippadi ezhutha matttinga...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அதை வச்சுத்தான் பச்சை சாதம் பண்ணேன்.அப்புறந்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.அவருக்கு ஏதோ அலர்ஜி இருக்குன்னு. அதுவும் கலர் அலர்ஜினு."//
ஆஹா !! கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்க !!

நானானி said...

உங்களுக்கு கருப்பு கலரில் சாதம் பண்ணி வச்சுருக்கேன், சாப்பிட்டு பாத்து, 'கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரா' இல்லையான்னு டெஸ்ட் பண்ணுங்க.

யாத்ரீகன் said...

:-)

Indian said...

அவ்வளவா சிரிப்பு வரல.

ஆனா மாறுபட்டு சிந்திக்கிறீங்க.
எழுத்தில் சரளமான நடை,

பாராட்டுக்கள்.

A said...

@ sudar,
//My God! 10 Pocket GREEN RICE for u.//
தமயந்தி செஞ்ச தப்புக்கு என்ன தண்டிக்கிறது நியாயமா?
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

@ARUVAI BASKAR
@ யாத்ரீகன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

@நானானி
//உங்களுக்கு கருப்பு கலரில் சாதம் பண்ணி வச்சுருக்கேன்//
ஏன் இந்த கொலை வெறி :(
ஒன்லி ஒயிட் ரைஸ். நோ கலர் ரைஸ் ப்ளிஸ்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

Unknown said...

theriyama etti pathuten. Mannichidu

Post a Comment

Blog Widget by LinkWithin