வழக்கமான விழித்தல்
வழக்கமான தேனீர்
வழக்கமான குளியல்
வழக்கமான அலுவலக பயணம்
வழக்கமான அலுவல்
வழக்கமான அரட்டை
வழக்கமான அயற்சி
வழக்கமான தூக்கம்
வழக்கமான ஏக்கம்
வழக்கத்திற்கு மாறாக
ஏதும் நடக்காதா
என்று!


Links to this post Labels: கவிதை
“ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டு ஹாய் செல்லம். உங்க செல்ல குழந்தைகள் என்னோட பேச உடனே கால் பண்ணுங்க. நம்ம ப்ரொக்ராமோட ஃபர்ஸ்ட் செல்லம் யாருன்னு பாப்போமா? ஹலோ!”.
“அல்லோ”
“ஹலோ! செல்லம் உங்க பேரு என்ன?”
“பேர்ர்ரு ராஜா”
“என்ன படிக்கிறீங்க?”
“படிக்கலை.ஹோம் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்”
“இலலைம்மா. எந்த கிளாஸ் படிக்கிறீங்க?”
“யூ.கே.ஜி. சி செக்சன்”
“சமத்து. இப்ப நம்ம ப்ரோக்ரம்ல என்ன பண்ண போறீங்க?”
“அழுவ போறேன்”
“ஏன் செல்லம்? அம்மா அடிச்சாங்களா?”
“இல்லை. மணி இன்னைக்கு என்னை விட்டு போக போறான்”
“மணி யாரு?”
“என் ஃப்ரெண்டு”
“ஊருக்கு போறானா”
“இல்லை செத்து போகப் போறான். செத்ததுக்கப்புறம் திரும்பி வர மாட்டானாம். அதான் அழுவ போறேன்”
“மணி செத்துப்போகப் போறான்னு யாரு உனக்கு சொன்னா?”
“எங்கப்பா”
“மணிக்கு உடம்பு சரியில்லையா? சாமிக்கிட்ட ப்ரே பண்ணிக்கோ. சாமி காப்பாத்துவாரு”
“இல்லை. மணியை கொல்லப் போறாங்க”
“கொல்லப் போறாங்களா? யாரு? உங்க அப்பாட்ட சொல்லி அவங்களை போலீசுல புடிச்சு கொடுக்க சொல்லு”
“கொல்லச் சொன்னதே எங்கப்பாதான்.கோயில் பூசாரிதான் கொல்ல போறார்”
“நீ என்ன சொல்றே? ஒன்னும் புரியலை”
“போன வருஷம் எனக்கு உடம்பு சரியலை.அதனால் மணியை வெட்டி பொங்க வைக்கிறேன்னு எங்கப்பா வேண்டிக்கிட்டாராம்.அதான் இன்னைக்கு வெட்டப் போறாங்களாம்”
“மணியை வெட்டி பொங்கல் வைக்கப் போறாங்களா? ஓ! மணி உங்க வீட்டுல வளர்ற ஆடா?”
“ஆமா. சின்ன வயசுலருந்து எனக்கு இருக்குற ஒரே ஃப்ரெண்டு. ம்ம்ம்...”
“அழக்கூடாது செல்லம். ஹலோ ஹலோ. அச்சச்சோ! லைன் கட்டாயிருச்சு.இப்ப பேசுன செல்லத்துக்குக்காக ஒரு பாடல்.கேட்டு என்ஞ்சாய் பண்ணுங்க”
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
...
ஆத்தோரம் மேயும் குறும்பாடு
அதை போட்டாத்தான் நம்க்கு சாப்பாடு
...
Links to this post Labels: புனைவு
Links to this post Labels: புனைவு
”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்”,கரட்டாண்டி.
“என்ன உண்மை தெரிஞ்சாகனும்? நீ மனுசனா இல்லையானா? இல்லைன்னு ஊருக்கே தெரியுமே”,கட்டையன்.
“நான் மனுசன் இல்லை. தெய்வம்னு எனக்குத் தெரியுமே”,கரட்டாண்டி.
“இப்படியே பேசிட்டு இருந்தேனா ஒரு நாள் உன்னைய பொணமாக்கிட்டு உன் போட்டோவுக்கு மாலை போட்டு தெய்வமாக்க போறாங்க”,கட்டையன்.
“சரி அதை விடு. ராமரோட அப்பா பேரு என்னான்னு சொல்லு”,கரட்டாண்டி.
“இதெல்லாம் ஒரு கேள்வியா? தசரதன்னு சின்ன பிள்ளையக் கேட்டாக்கூட சொல்லும்”,கட்டையன்.
“அது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.உன்னை மாதிரி வளந்த கிடாவுக்கும் தெரியும். ராம்ரோட அப்பா பேரு தசரதன்னா ‘த’ராமர்ன்னுல எழுதனும்.ஏன் ‘இ’ராமர்ன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.
கட்டையன் மனசுக்குள் ‘இவன்கிட்ட ஒழுங்கா பதில் சொன்னா அடுத்து எடக்கு மடக்கா இன்னொரு கேள்வி கேட்பான்.இவனுக்கு வேற மாதிரிதான் பதில் சொல்லனும்’.“அது இந்த U.S போய்ட்டு வந்தவங்க U.S ரிட்டன்னு போட்டுக்கறது இல்லையா? அந்த மாதிரிதான் இதுவும்”,கட்டையன்.
“புரியலையே”,கரட்டாண்டி.
“ராமர் இலங்கைக்கு போய் சீதையை காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததால இலங்கை ரிட்டன் ராமர்.அதைதான் சுருக்கி ‘இ’ராமருன்னு எழுதறாங்க”,கட்டையன்.
“ஓ! அதுதான் லட்சுமணனைக் கூட ‘இ’லட்சுமணன்னு எழுதறாங்களா?”,கரட்டாண்டி.
“சரியா புரிஞ்சுக்கிட்டியே”,சிரித்துக் கொண்டே கட்டையன்.
“சரி. அப்புறம் ஏன் ராவணனையும் ‘இ’ராவணன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.
கட்டையன் மனசுக்குள் ‘ஆரம்பிச்சுட்டாண்டா’. “ம்ம். அது வந்து...”,கட்டையன்.
“மாட்டிக்கிட்டியா? இழுக்காம பதிலை சொல்லுடா”,கரட்டாண்டி.
“அங்.சீதாவைக் கடத்துறதுக்காக ராவணன் இந்தியாவுக்கு வந்துட்டுப் போனான்ல.அதனால இந்தியா ரிட்டன் ராவணன். ‘இ’ராவணன்னு எழுதுறாங்க.எப்பூடி?”,கட்டையன்.
“நீ சொல்றது எல்லாம் சரின்னா சீதாவை மட்டும் ஏன் சீதான்னு எழுதுறாங்க. ‘இ’சீதான்னுல எழுதனும்? எப்பூடி?”,கரட்டாண்டி.
கட்டையன் மனசுக்குள் ‘விடமாட்டேங்கறானே’. “ராமர் இந்தியாவுல இருந்துக்கிட்டே உண்ணாவிரதம் இருந்தோ,பந்த் நடத்தியோ இல்லை ரெண்டு மூணு பேர் தீக்குளிச்சோ போராட்டம் பண்ணி அதனால ஒருவேளை ராவணன் மனசு மாறி சீதாவை அவனே கொண்டு வந்து விட்டுருந்தா இலங்கை ரிட்டன் சீதா ‘இ’சீதான்னு எழுதிருபாங்க.ஆனா ராமர் இலங்கைக்கு போய் போர் செஞ்சுல மீட்டுட்டு வந்தார்.சீதாவுக்கு ராமர் இருக்குமிடந்தான் அயோத்தின்னு சொல்லுவாங்கள.சீதாவை ராவணன் கடத்திட்டு போனப்போ அது சீதாவுக்கு இலங்கை.போருக்காக ராமர் இலங்கை வந்ததும் அது சீதாவுக்கு அயோத்தி ஆயிருச்சு.அதனால ‘இ’சீதான்னு எழுதிறதில்லை”,கட்டையன். மனசுக்குள் ‘ஸ்ஸ்ஸ்.இப்பவே கண்ணை கட்டுதே’.
“அப்ப ...”,கரட்டாண்டி.
“டேய் நிறுத்துடா!.நீதான் கேனைனா இதை படிக்கிறவனும் கேனையா?பாவம்டா அவங்க. விட்டுடுடா”,கட்டையன்.
Links to this post Labels: நகைச்சுவை , மொக்கை

Links to this post Labels: கவிதை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.ஏதாவது ஒரு அவள் நோக்கினால் அவளுடன் அனல் பறக்க அளவளாவ வாங்கிய அலைபேசி அலறியது.ஒரு அனாவசிய அழைப்பு வழக்கம்போல்.
”ஹலோ சார் நாங்க பரலோகம் ட்ராவல்ஸ்லிருந்து பேசுறோம்”.
“நான் எதுவும் டிக்கெட் புக் பண்ணலையே”.
“அது இல்லை சார். எங்க ட்ராவ்ல்ஸ்ல புதுசா ஒரு திட்டம் அறிவிச்சிருக்கோம்.Honeymoon Hillsனு இந்தியாவுல இருக்குற எந்த ஒரு ஹில் ஸ்டேஸ்ஷ்னுக்கும் 10,000 ரூபாய் மட்டுந்தான் சார்”
“அதெல்லாம் கல்யாணமான புது ஜோடிங்களுக்கு கால் பண்ணி சொல்லுங்க.எனக்கு எதுக்கு கால் பண்றீங்க?”
“உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? பரவாயில்லை சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் ரெஃபர் பண்ணுங்க.காசி-ராமேஸ்வரம் பேக்கேஜ் ஃப்ரீயா கிடைக்கும்”
“ஓ அப்படியா? எங்க அப்ப அம்மா கூட காசிக்கு போகனும் ரொம்ப நாளா சொல்லிகிட்டுருந்தாங்க.அந்த பேக்கேஜுக்கு எவ்வுளவு சார்ஜ் பண்ணுறீங்க?”
“இல்லை சார் அது இலவச பேக்கேஜ்.அதை தனியா நாங்க கொடுக்கறது இல்லை.”
“கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்”
”லைன்ல இருங்க சார். கேட்கிறேன்”
சிறிது நேரம் கழித்து “சார் நீங்க வேற ஏதாவது டிக்கெட் எங்க ட்ராவல்ஸ்ல புக் பண்ணீங்கன்னா காசி ராமேஸ்வரம் பேக்கேஞ் கம்மியான ரேட்ல கொடுக்கலாமுனு மேனேஜர் சொல்றார்”
”சரி.காசிக்கு அப்புறம் ராமேஸ்வரமா,இல்லை ராமேஸ்வரத்துக்கு அப்புறம் காசியா?”
“அது உங்க இஷ்டம் சார். நாங்க பேக்கேஜ் கொடுத்துடுவோம். எது முதல்ல பாக்கறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.”
“என்னைக்கு வண்டி கிளம்புது?”
“எதுக்கு சார்?”
“காசிக்கு எப்ப வண்டி கிளம்புது?”
“நாங்க வண்டிலாம் அனுப்ப மாட்டோம் சார்.நீங்களே பஸ்லயோ ஆட்டோலயோ வந்துருங்க.”
“என்னது ஆட்டோலயா? காசி வரைக்கும் ஆட்டோலயா போகனும்?”
“காசிக்கெல்லாம் போக வேண்டாம் சார்.வீட்டுலையே பாக்க்லாம்.”
“வீட்டுலேயவா?எனக்கு ஒண்ணும் புரியலை”
“ஆமாம் சார்.காசி ராமேஸ்வரம் ரெண்டையும் அழகா பேக் பண்ணி ஒரே பேக்கேஜா கொடுத்துடுவோம்.நீங்க வீட்டுக்கு கொண்டு போய் பிரிச்சு பாத்துக்கலாம்.”
“நீங்க என்ன சொல்றீங்க? காசியயையும் ராமேஸ்வரத்தையும் பேக் பண்ணி கொடுப்பீங்களா?”
“பேக் பண்ணி கொடுக்கறதுனலா அது திருட்டு டிவிடியா இருக்குமோனு பயபடுறீங்களா? ரெண்டும் ஒரிஜினல் டிவிடி சார்”
“என்னது டிவிடியா? காசி ராமேஸ்வரம்னு சொன்னீங்க?”
“ஆமாம். விக்ரம் நடிச்ச காசி பட டிவிடியும் ஜீவா நடிச்ச ராமேஸ்வர பட டிவிடியும் பேக் பண்ணி தரதுதான் காசி ராமேஸ்வரம் பேக்கேஜ்.உங்களுக்கு எந்த ஊருக்கு டிக்கெட் புக் பண்ணனும் சார்?”
டொக்.
Links to this post Labels: நகைச்சுவை , மொக்கை
”உத்யோகம் புருஷ லட்சணம்”இதுதான் நமக்கு பெரியவர்கள் சொன்னது.
Links to this post Labels: நகைச்சுவை , புருஷ லட்சணம்
Copyright 2009 - எண்ணச்சிதறல்கள்