Monday, August 25, 2008

ஆயிரம் காலத்துப் பயிர்

கட்டையனும் கரட்டாண்டியும் டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.கரட்டாண்டி ஒரு நகைச்சுவைத்துணுக்கைப் படித்துவிட்டு கட்டையனிடம் "நான் ஒரு கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு பாப்போம்"னு கேட்டான்.கட்டையனும் "சரி கேளு"னு சொன்னான்.

கரட்டாண்டி "கல்யாண வீட்டுக்குள்ளே ஏன் ஆடு மாடெல்லாம் உடறது இல்லை?".கட்டையன் "உன்னை மாதிரி திண்ணுக் கொழுத்தவனெல்லம் அதை அடிச்சு பிரியாணி போட்டுட கூடாதுனுதான்".கரட்டாண்டி "ம்ம்.கேள்விக்கு பதில் தெரியாட்டாலும் இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.". கட்டையன் "சரி சரி. நீயே பதில் சொல்லு".கரட்டாண்டி "கல்யாண்ம் ஆயிரம் காலத்துப் பயிர்.அதை ஆடு மாடு மேஞ்சுறக்கூடாதுன்னுதான்".கட்டையன் "டேய் காலாங்காத்தலேயே ஏண்டா இப்படி கடிக்கிறே?"

கரட்டாண்டி "சரி அதை விடு.கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?". கட்டையன் "ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.
அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.புரிஞ்சுதா?".கரட்டாண்டி "ம்ம்ம். புரிஞ்சுச்சு".

கட்டையன் "இப்ப நான் சொன்னது எல்லாரும் சொல்ற அர்த்தம். ஆனா இதுக்கு இன்னொரு அர்த்தம் எனக்கு தெரியும்".கரட்டாண்டி "அதானே பாத்தேன்.என்னடா எந்த வில்லங்கமும் இல்லாம விளக்கம் சொல்றானேன்னு? அதையும் சொல்லி தொலை." கட்டையன் "எந்த பயிருமே அதிகபட்சமா ஆறு மாசத்துல அறுவடை பண்ணிடலாம்.ஆறு மாசம் கழிச்சு நாம எல்லாமே சரியாத்தான் பண்ணிருக்கோமுன்னு சந்தோஷப்படலாம். ஆனா கல்யாணம் பண்ணதுக்கப்பறம் நாம் பண்ணது சரியா தப்பானு தெரியறதுக்கு ஆயிரம் வருஷம் கூட பத்தாது.அதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க".கரட்டாண்டி "அடப்பாவி! இதை கேட்டா எவன்டா தைரியமா கல்யாணம் பண்ணுவான்.உன்னையெல்லாம்...."னு கட்டையனை துரத்துகிறான்.

4 comments:

குமரன் (Kumaran) said...

:-)))

Natty said...

reppeeeatai......

100% correctu

A said...

@குமரன்
@ Natty
நன்றி

Muthu kumaran said...

latestaa kalyanam aana yaaraiyoo thaakura madhiri irukae

Post a Comment

Blog Widget by LinkWithin