Sunday, August 3, 2008

அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது...

கட்டையன்: என்னடா ரொம்ப சோகமா வர்றே?

கரட்டாண்டி: எங்கப்பா என் loveக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா

கட்டையன்: எவன்டா இவன்? கமலே love பண்ணா அப்பாவை கண்டுக்காதேனு தசாவதராத்தில சொல்லிருக்காரு.இன்னமும் அப்பாட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு.

கரட்டாண்டி: தசாவதாரத்தில love scenea இல்லையேடா? சாமிய கண்டுக்காதேனுதான எப்பவும் சொல்லுவார். இப்ப அப்பாவையும் கண்டுக்காதேனு சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? நான் கவனிக்கலையே.

கட்டையன்: இந்த பாட்டு நீ கேக்கலையா? "அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது".

கரட்டாண்டி: ஆமாம். அது சாமி பாட்டு இல்லையா? இதுல எங்கே love வருது? எங்க அப்பா எங்கே வர்ரார்?

கட்டையன்: ம்ம்.. உங்க அப்பா வேற இந்த பாட்டுல வரனுமா? இந்த பாட்டுக்கு அர்த்த்ம் தெரியுமா உனக்கு?

கரட்டாண்டி: தெரியாதே?

கட்டையன்: I Love You ஏற்கும் மனது Daddyயை பார்க்காது

கரட்டாண்டி: டேய்.. கதை விடாதே.

கட்டையன்: அஷ்ட அட்சரம்னா எட்டு எழுத்து அதாவது எட்டு லெட்டெர்ஸ் . I Love Youல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. எட்டு லெட்டெர்ஸ் வருதா?

கரட்டாண்டி: ஆமாம்

கட்டையன்:பஞ்ச அட்சரம்னா அஞ்சு எழுத்து அதாவது அஞ்சு லெட்டெர்ஸ். Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? இப்ப கணக்கு சரியா வருதா?

கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love Youனு சொன்னதுக்காகவா அந்த அடி அடிச்சாங்க.

கட்டையன்: பாட்டுக்கு அர்த்தம் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது.

9 comments:

Indian said...

ஹா..ஹா..ஹா...

அருமையான ஆராய்ச்சி!
மேலும் தொடரட்டும்.

கதிர் said...

//கவனம் சிதறினால் காரியம் கெடும். எண்ணங்கள் சிதறினால்...//

துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு....

படிச்ச உடனே இதான் தோணுச்சு. :)

Unknown said...

ந‌ல்ல‌ க‌ற்ப‌னை! க‌ல‌க்க‌ல்!!
ஆராயாம‌ல் அனுப‌விக்கிறோம்!

//கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love You சொல்லலைங்கறதக்காகவா அந்த அடி அடிச்சாங்க.\\

க‌ம‌ல் I Love You (அஷ்ட அட்சரம்) சொன்னார்ங்க‌ற‌தாலதான் அந்த‌ அடி, ஜ‌ல‌ச‌மாதி எல்லாம். :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஆகா ! நாம்ப ஆளுங்க நல்லா தான் யோசிக்கிறாங்க !

Nilavan said...

இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சி பண்ணி எழுதுவீங்களா...


ம்ம்..... ரொம்ப நல்லா இருக்கு ஆனந்த்.

நட்புடன்,
நிலவன்

http://eerththathil.blogspot.com

குமரன் (Kumaran) said...

:-)))

கோவி.கண்ணன் said...

சூப்பரு......!

A said...

@Indian
@தம்பி
@karikalan
@ARUVAI BASKAR
@நிலவன்
@கோவி.கண்ணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@குமரன்
என்னுடைய பதிவை உங்கள் தளத்தில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
http://koodal1.blogspot.com/2008/08/blog-post_20.html

A said...

@karikalan
ஆராயமாட்டேனுட்டு தப்பை கண்டுபிடிச்சி சொல்றீங்களே :)
சரி செய்து விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி

Post a Comment

Blog Widget by LinkWithin