ஜாதகம் - சாதகம் என்ற வார்த்தையிலிருந்து மருவியதோ என்று எனக்கு சின்ன சந்தேகம் உள்ளது.எல்லாரும் ஜாதகம் பார்ப்பது அவர்கள்க்கு வருங்காலம் சாதகமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலே. அந்த ஆவலை இன்று பலர் தங்களுக்கு சாதகமாக்கி பரிகாரம்,பூஜை என்று பணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.உன் வருங்காலம் இதுதான் என்று கூறும் ஜோஸ்யர்கள், அதை மாற்ற பரிகாரமும் சொல்கிறார்கள்.அப்படி நமது தலைவிதியை பரிகாரம் மூலம் மாற்ற முடியுமென்றால் ஏன் பல ஜோஸ்யர்கள் தங்களை கோடீஸ்வரர்களாக்கும் பரிகாரம் செய்யாமல் இன்னமும் மரத்தடியிலும்,கிளி கூண்டை சுமந்து கொண்டும்,லாட்ஜ் ரூமிலும் ஜோஸ்யம் பார்க்கிறார்கள்.பொதுநலன் கருதி இருக்குமோ?அப்படியென்றால் பணம் ஏன் வாங்குகிறார்கள்?
சரி விசயத்துக்கு வருவோம்.தலைப்பில் சொன்ன அந்த ஜாதகத்திற்க்கு சாதகமில்லாதவன் அடியேன் தான். நான் கல்லுரியில் மூண்றாம் ஆண்டு படிக்கும் பொழுது எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோஸ்யர் வந்திருந்தார்.வழக்கம் போல என் ஜாதகமும் அவர் கையில் கொடுக்கப்பட்டது.இதோ என் அம்மாவுக்கும் ஜோஸ்யருக்கும் நடந்த உரையாடல்
ஜோஸ்யர்: பையனுக்கு படிப்பு வராது.வியாபரந்தான் லாயக்கு.
அம்மா: இல்லைங்க. அவன் இப்ப படிச்சிட்டுக்கிட்டுத்தான் இருக்கான்.
ஜோஸ்யர்: படிக்க்லாம். ஆனா டிகிரி வாங்க மாட்டான்.
அம்மா: அவன் இப்ப காலேஜ்லதான் படிக்கிறான்.
ஜோஸ்யர்: டிகிரி வாங்குவான். ஆனா வேலை கிடைக்குறது கஷ்டம்.
அம்மா: அவன் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் படிச்சிக்கிட்டுருக்கான்.
ஜோஸ்யர்: வேலை கிடைக்கும். ஆனா கவர்மெண்ட் வேலை கிடைக்காது.
இந்த உரையாடலின் போது நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்திருந்தேன்.கட்டிலில் இருந்து எந்திரிக்காமல் கண்களை மூடி படுத்திருந்தேன்.இந்த உரையாடலை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இது முதல் முறையல்ல.என் ஜாதகத்தை பார்த்த ஜோஷ்யர்கள் அனைவரும் எனக்கு படிப்பு வராது.நான் வியாபரம் செய்யத்தான் லாயக்கு என்று சொல்வார்கள்.அதனால்தான் சொல்கிறேன் நான் ஜாதக்திற்கு சாதகமில்லாதவன்.
சிறு வயதிலிருந்தே நான் வியாபரம் செய்ய போகிறேன்.எனக்கு எதுக்கு படிப்பு என்று என் பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பி செயல்பட்டிருந்தால் இன்று நான் ஏதாவ்து வியாபரம்தான் செய்து கொண்டிருந்திருபேன்.ஜாதகத்தை நம்பாமல் என் அம்மா அப்பா என்னை நம்பியதால் இன்று இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.எந்த விசயத்தை நாம் முழுமையாக நம்புகிறோமோ அந்த விசயம் கண்டிப்பாக நடக்கும்.நானோ எனது அம்மா அப்பாவோ ஜாதகத்தை முழுமையாக் நம்பவில்லை.அதனால் என் விசயத்தில் ஜோஷ்யர்கள் என் தலைவிதியை நிர்ணயிக்க முடியவில்லை.என் ஜாதகமும் என்னிடம் போராடி தோற்றுவிட்டது.
ஒரு ஆறு மாததிற்கு முன் எப்படியாவது என் வருங்காலத்தை தெரிஞ்சுக்கனுமுனு எங்க அம்மா இன்னொரு ஜோஷ்யரிடம் என் ஜாதத்தை காண்பித்திருக்கிறார்கள்.என்னை பத்தி எல்லா விசயத்தையும் முன்னாடியே சொல்லிட்டாங்க போல.அந்த ஜோஷ்யரும் ஜாதகத்தை பார்த்து விட்டு ”யாரோ தப்பா ஜாதகம் எழுதி இருக்காங்க.பஞ்சாங்கப்படி இந்த நட்சத்திரம் வராது” அப்படினு சொல்லிருக்காரு.ஏன்னா ஜாதகம் பாத்து சொன்னா அவருக்கும் ஜோஷ்யம் தெரியலைனு எங்க அம்மா முடிவு பண்ணிருவாங்கனு அவருக்கு புரிஞ்சிருச்சு.
எனக்கு புடிச்ச வசனம்
“சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்”.
ஜாதகத்துல நல்லது நடக்கும்னு சொன்னா நம்புங்க.கெட்டது நடக்கும்னு சொன்னா நம்பாதிங்க.நீங்க நல்லா இருப்பீங்க.ஜாதகமே பார்க்காம இருந்தா இன்னும் நல்லா இருப்பீங்க. நாளைக்கு என்ன நடக்குமுனு யாராலும் சொல்ல முடியாது. அடுத்து என்ன நடக்குங்கிற சுவாரஸ்யத்துலதான் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமா இருக்கு.
1 comments:
nalla irrukku...
enakkum pidicha quote
“சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்”. :-)
Post a Comment