Wednesday, July 23, 2008

இடி மின்னல், கோலம்

பள்ளி பருவத்தில் தோன்றிய கவிதைகளை(ஹைக்கூ போல் இருக்கும்) இங்கு பதிவு செய்கிறேன்.

கார்கில் யுத்தம் நடந்தபோது எனக்கு தோன்றிய கவிதை:

இடி மின்னல்
மேகங்கள் செய்யும் யுத்தம்
வானிலும் எல்லை
மீறலோ?

கல்வி
கற்றவன் நனவு
கல்லாதவன் கனவு
இருவருக்கும் இன்றது
செலவு!




இந்த கவிதை படித்ததா இல்லை எனக்கு தோன்றியதா என்று நினைவில் இல்லை. ஆனால் என்றும் என் நினைவை விட்டு நீங்கா கவிதை.

கோலம்
புள்ளியில் வரைந்த கவிதை
புனைந்த தேவதை
யாரோ?



தொலைவில்

அந்தஸ்து அதிகாரம்
ஆடம்பரம் - அருவெருப்பாய்
அருகில்
அதனால்
அன்பு அமைதி
ஆனந்தம் - அணுகமுடியா
தொலைவில்

ஓட்டம்

கசடற கற்க
நாடுகிறான் தாய்நாடு
கற்றதை காசாக்க
ஓடுகிறான் வெளிநாடு

Friday, July 11, 2008

வாழும் வழி...

வாழும் வழி...

வார்த்தைகள் தேடி
வறண்டு போனேன்
வாழ்த்த வழிகள்தேடி
வழிதொலைந்து போனேன்
வாழ்த்தி வாழ்பவர்களின்
வல்லமை வசப்படாமல்
வசைபாடி வலுவிழேந்தேன்
வாழும் வழிதெரியா என்னை...

கண்டதும்..

கண்டதும்..
ஆராய்கிறான்
அசை போடுகிறான்
அவகாசம் கேட்கிறான்
நட்பை ஏற்றுக்கொள்ள

உருகுகிறான்
உண்ண மறக்கிறான்
உறக்கம் துறக்கிறான்
காதலைக் கற்றுக்கொள்ள

கண்டதும்
கண்டுகொள்ள சாத்தியமில்லை
நட்பை - சாத்தியம்
காதலுக்கு மட்டுமே!
Blog Widget by LinkWithin